ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டப விவகாரம்! ரஜினியின் கருத்து!

Photo of author

By Parthipan K

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உரிமையான ராகவேந்திரா திருமண மண்டபத்தின் மீது சென்னை மாநகராட்சி 6.5 லட்சம் வரியை விதித்தது.

இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு ஒன்றை ரஜினி சார்பில்  அவரது தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதாவது கொரோனா காலகட்டத்தில் திருமண மண்டபத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறாத காரணத்தால் வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் நேற்று இந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக ரஜினி தரப்பு மாநகராட்சியில் மனு செய்வதை விட்டுவிட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதை நிறுத்துமாறு கருத்து தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து ரஜினி தரப்பினர் மனுவினை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறு இருக்க ரஜினி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறித்து ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறை தவிர்த்திருக்கலாம். அனுபவமே சிறந்த பாடம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.