தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், வருகின்ற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக தலைமையிலான இந்திய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காணுகிறது. குறிப்பாக சுமார் 24 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
எஞ்சிய 15 தொகுதிகள் பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அக்கட்சி வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பான்மை குறைந்த தமிழகத்தில், வாக்கு செல்வாக்கை அதிகரிக்கும் விதமாக பாஜக சார்பில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, பிரதமர் மோடி இதுவரை 7 முறை தமிழகத்தில் பரப்பரை மேட்கொண்டுள்ளார். அவரை தொடர்ந்து, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஆகியாரும் தமிழகத்தில் வாக்கு வேட்டையில் படையை கிளப்பினர்.
இவர்களை தொடர்ந்து, பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 16ம் தேதி தமிழ்நாடு வருவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து ராஜ்நாத் சிங் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பிக்கப்பட்டுள்ளது..
மக்கள் மனதை கவரும் வகையில் பல்வேறு வியூகங்களை செயல்படுத்தி வரும் பாஜக தமிசகத்தில் செல்வாக்கை நிரூபிக்குமா பொறுத்திருந்துக்கு பார்ப்போம்..