எதிர்க்கட்சிகள் அமளியால் கண்ணீர் விட்ட வெங்கையா நாயுடு!

Photo of author

By Sakthi

மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எல்லை மீறி இருப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர்விட்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார். சென்ற ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. கூட்டத்தொடர் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி மாநிலங்களவை, மக்களவை, என்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் அமளி செய்து முடக்கி வருகின்றன.

இந்த நிலையில், நேற்றைய தினம் மாநிலங்களவையில் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதித்த சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேஜையின் மீது ஏறி அமர்ந்தும், நின்றும் , காகிதங்களை கிழித்து எறிந்து பேசியிருக்கிறார். அமைதியாக இருக்குமாறு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பலமுறை அறிவுரை வழங்கியும், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இதன் காரணமாக மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை 11 மணியளவில் மீண்டும் மாநிலங்களவை கூடியது அந்த சமயத்தில் உரையாற்றிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நேற்று நாடாளுமன்றத்தில் புனிதத்தன்மை அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் நான் மிகவும் வேதனை அடைந்தேன் ஒரு சில உறுப்பினர்கள் மேஜையில் அமர்ந்தோம் சிலர் மேஜையின் மீது ஏறி போராட்டம் செய்தார்கள். நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் ஆனால் நேற்றைய தினம் நடந்த இந்த சம்பவம் காரணமாக, நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மை சிதைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார். என்னுடைய வேதனையை சொல்லவும், இத்தகைய செயல்களை தண்டிக்கவும், என்னிடம் வார்த்தை கிடையாது. இந்த சம்பவத்தால் நேற்று இரவு எனக்குத் தூக்கம் கூட வரவில்லை என்று கூறிய அவர் வேதனையில் கண்ணீர் விட ஆரம்பித்தார்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த வெங்கைய்யா நாயுடு இந்த மழைக்கால கூட்டத்தொடர் இவ்வளவு மோசமாக நடப்பதற்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க போராடுகின்றோம் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.அதேபோல மழைக்கால கூட்டத்தொடரின் 17 ஆவது நாளான இன்றைய தினம் மக்களவை ஆரம்பித்தவுடன் உரையாற்றிய சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் படுகிறது என்று அறிவித்தார்.

இதன்காரணமாக, ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக இருந்த மழைக்கால கூட்டத்தொடர் இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே முடிக்க படலாம் எனவும், சபாநாயகர் ஓம் பிர்லா இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.