மழை வந்துவிட்டதா? சுட சுட கேழ்வரகு பக்கோடா செய்து கொடுத்து அசத்துங்கள்..!

0
232

மழைக்காலத்தில் சூடாக சாப்பிட விரும்புவர். ஆனால், நாம் செய்யும் உணவுகள் எல்லாம் சத்துள்ளதாக இருக்குமா என்பது கேள்வி குறி. மழைநேரத்தில் மொறுமொறுப்பாகவும் சத்தாகவும் இருக்கும் சூப்பரான கேழ்வரகு பக்கோடா செய்து கொடுங்கள்.

தேவையானவை :

கேழ்வரகு மாவு – 100 கிராம், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 1 இஞ்சி – சிறிய துண்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை கழுவிய பின் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை சேர்த்து கொள்ளுங்கள்.

அதனுடன் அரிசி மாவு, தயிர், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி – கறிவேப்பிலை சேர்த்து கொள்ளுங்கள்.

தேவையான அளவு உப்பு சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.அடுப்பில் கடாயை வைத்து பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.

அது காய்ந்ததும் மாவை பக்கோடாவாக கிள்ளி போட்டு பொறித்து எடுத்து கொள்ளுங்கள்.

சூடான டீ அல்லது காப்பியுடன் கேழ்வரகு பக்கோடாவை வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறலாம்.

Previous articleஐம்புலன்களையும் அடக்கி ஆள கற்றுக் கொடுக்கும் ஐயப்பன் விரதம்!
Next articleபத்து நாட்களில் உடல் எடை குறைய வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீர் போதும்!