ஐம்புலன்களையும் அடக்கி ஆள கற்றுக் கொடுக்கும் ஐயப்பன் விரதம்!

0
122

ஐயப்ப விரதம் ஐம்பது நாட்களுக்கு உரையாதது இந்த விரதத்தை அனைத்து விரதத்திற்கும் பெரிய விரதம் என்று சொல்லலாம். அனைத்து விரதங்களும் மௌனமாக இருக்கவும், பட்டினி இருக்கவும், கண் விழிக்கவும், தெய்வ வழிபாடு செய்யவும் தான் வலியுறுத்தும். ஆனால் ஐம்புலன்களையும் அடக்கி அதன் வழி இறை உணர்வை காட்டும் ஒரே விரதம் சபரிமலை ஐயப்ப விரதம் தான்.

கீதையின் போதனையும், ஞானிகளின் உபதேசமும், இதிகாசங்கள் பக்தி இலக்கியங்கள் யாவும் ஆணித்தரமாய் வற்புறுத்துவது, ஐம்புலன்கள் அடக்கமே அதனை செயலில் காட்டச் செய்வதே இந்த ஐயப்ப விரதத்தின் மகிமையாகும்.

பிரம்மச்சாரியம் என்பது ஆண், பெண் சேர்க்கையை தவிர்ப்பது என்பதாகும். ஆனால் ஐயப்ப விரதம் என்ன சொல்கிறது தெரியுமா? மனதாலும் பெண்ணை தீண்டாமல் இருப்பதே பிரம்மச்சாரியம் என்று சொல்கிறது. அது மட்டும் அல்ல இந்த விரதத்தை கடைபிடிக்கும் எல்லோரும் தாங்கள் பார்க்கும் பெண்களை அம்பிகையின் அவதாரமாக கருதுவதே இந்த விரதத்தின் உயர்ந்த தத்துவமாகும்.

நாள்தோறும் காலை மாலை இருதலையும் தவறாமல் குளிர்ந்த நீரில் நீராடி வழிபட வேண்டும். மழையோ, பனியோ, குளிரோ நிர்வாக இருந்தாலும் தொடர்ந்து 45 நாட்கள் முதல் 50 நாட்கள் வரையில் குளித்து விரதத்தின் முடிவாக சபரிமலை யாத்திரையில் நேரும் மழை, பனி, குளிர் இயற்கை சீதோஷ்ணத்திற்கு உடல்நிலை பாதிக்கப்படாமல் இருக்க நம்மை பழக்கப்படுத்தி தயார்படுத்துவது தான் இந்த விரதத்தின் சாதனை என்று சொல்லலாம்.

அவரவர் தாய்மொழியில் ஐயப்பன் நாமங்களை சரணம் சொல்லுதல், ஐயப்பனை கிடைக்கும். நேரத்திற்கு ஏற்றவாறு கூடுதலாகவோ, குறைவாகவோ சொல்லி வழிபட்டு பானகம் கரைத்த நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றி தீப ஆராதனை செய்து வழிபட்டால் போதுமானது.

ஐயப்பன் விரதம் மேற்கொள்ளும் போது காவி உடை அணிய வேண்டும். ஏனென்றால் மற்ற மனிதர்களிடமிருந்து பிரித்துக் காட்டவும், தன்னைத்தானே உணர்ந்து சதா, சர்வ காலமும் ஐயப்பனை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கவும், கொலை, களவு, பொய், வன்முறை உள்ளிட்ட எந்த தீமையும் எண்ணத்தில் கூட வராமல் இருக்கும் பொருட்டு அறிவுறுத்தும் விதத்தில் காவி உடை விரதம் கொள்பவருக்கு கவசமாக இருந்து உயர்த்துகிறது.

மாயை குறிப்பது கருப்பு ஐயப்பா நான் மாயையில் உழன்று தவிக்கிறேன். என்னை மாயையில் இருந்து விடுபடச் செய் என்று வேண்டிக் கொள்ள ஏதுவாக கருப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

விரத காலத்தில் நண்பகல் உணவும், இரவு பலகாரமும், உணவும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். தினசரி வாழ்க்கையில் பயன்படுத்திய பாய், தலையணை, போர்வை எதுவுமே விரத காலத்திற்கு உகந்தது கிடையாது.

இவையின்றி படுத்துறங்க பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் காட்டு பிரவேச பயணத்தின் போது இவை பெரிதும் உதவும் இந்த நியதி மூலம் எப்படியும் வாழ முடியும் என்ற நிலைக்கு மாற்ற ஐயப்ப விரதம் பக்தர்களை முழுமையாக தயார் படுத்துகிறது.