இப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!

Photo of author

By Kowsalya

இப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!

விஜய் டிவியில் தொடர்ந்து நடந்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் அனைவருக்கும் தெரிந்ததே.அதில் ‘சரவணன் மீனாட்சி புகழ் ‘செந்தில் இரு வேடத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

சென்னையில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பு முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்ட உடன் சீரியல் நடிகை நடிகர்கள் நடிக்கும் தங்களது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது விஜய் டிவியின் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் நடித்து வரும் நடிகையான ரக்க்ஷா தன்னை கேட்காமலேயே நாடகத்தில் இருந்து தூக்கி விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்..

ரக்க்ஷா பற்றி உங்களுக்கு அதிகம் தெரியும் அவர் மிகவும் அழகாகவும் நல்ல நடிப்புத் திறமையுடனும் இருப்பார். இவருக்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

நான் புது முடக்கம் அறிவித்ததில் இருந்து எனது சொந்த ஊரான பெங்களூருக்கு சென்று விட்டேன்.இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஷூட்டிங் இருப்பதாக என்னை அழைத்தார்கள் நான் பொது முடக்கம் காரணமாக செல்ல வேண்டாம் என்று வீட்டில் வற்புறுத்துகிறார்கள் மற்றும் கொரோனா தொற்றுகள் அதிகமாக உள்ளதால் வீட்டில் அஞ்சுகிறார்கள்.

நான் சென்னையில் இருந்தால் கூட சூட்டிங் வர தயங்க மாட்டேன் ,வேறு மாநிலத்தில் இருந்து கொண்டு என்னால் சென்னை வர முடியாது என்று கூறியிருந்தேன். மேலும் அவர்களிடம் எனக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

தற்பொழுது எனது வேடத்தில் ‘சரவணன் மீனாட்சி புகழ்’ ‘ ‘ரக்ஷிதா’ இடம்பெற்றிருப்பதாக மற்றும் நடித்து வருவதாக கேள்விப்பட்டேன்.எனக்கு யாரிடமும் எந்த கோபமும் இல்லை பொது முடக்கம் காரணமாக வர முடியவில்லை என்பதே என்னுடைய நிலைமை.
என் கதாபாத்திரத்தில் இன்னொருவர் நடிப்பதை எனக்கு தெரிவித்திருக்கலாம் இதுதான் என்னுடைய குமுறலாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.