தமிழ்த் திரையுலகில் எத்தனைப் படங்கள் வந்தாலும், ஒரு சில படங்கள் மட்டும்தான் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். அந்த வகையில் வெளியான படம்தான் 2018-ஆம் ஆண்டு வெளியான “96” திரைப்படம். இந்தப் படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். பள்ளிப் பருவக்கால காதலை மிக அழகாக எடுத்துரைக்கும் வகையில் இந்த படம் அமைந்திருக்கும். இந்தப் படம் மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று வரை “ராம், ஜானு” என்ற பெயர் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
இயக்குனர் பிரேம்குமார், நடிகை கார்த்தியை வைத்து எடுத்த “மெய்யழகன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அந்த வகையில், இயக்குனர் பிரேம்குமார் “96 பார்ட்-2” படத்தின் ஸ்கிரிப்டை எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது அது முழுவதும் எழுதி முடிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இயக்குனர் பிரேம்குமார், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை திரிஷாவை வைத்து “96 பார்ட்- 2” எடுக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த செய்தி ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல், தமிழில் பிரபல டெலிவிஷன் ஷோவில் ஆங்கராகவும் இருந்து வருகிறார். நடிகை திரிஷாவும் பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.