தன் திரை உலக வாழ்க்கையில் 1400 திரைப்படங்களுக்கு மேல் நடித்த அசத்திய நடிகையாக ராம பிரபா விளங்குகிறார். தமிழ் மட்டுமல்லாத தெலுங்கு திரையுலகிலும் காமெடியாக நடித்த கொடிகட்டி பறந்தவர் இவர். மறைந்த நடிகர் சரத் பாபுவின் முதல் மனைவியான ராம பிரபா மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம் உதவி கேட்க அவர் என்ன செய்தார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தன்னைவிட நான்கு வயது மூத்தவரான சரத்பாபுவை திருமணம் செய்து கொண்ட கிராம பிரபா வாழ்வில் பல சவால்களை சந்தித்த நிலையில் 1988 இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்ற பிரிந்து இருக்கின்றனர். விவாகரத்து பெற்ற பின் ஏராளமான கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்த ராம பிரபா ஒரு கட்டத்திற்கு மேல் வாழ்க்கை சூழல் மிகவும் கடினமாக மாறவே தெலுங்கு சினிமாவில் அதிக திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு இணையாக நடித்து சொத்து சேர்த்தார். ஆனால் ஒருவரை நம்பி அனைத்து சொத்துக்களையும் இழந்து கட்டிய புடவையுடன் நடுத்தெருவிற்கு வந்திருக்கிறார் ராமபிரபா.
அந்த நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல் திகைத்ததோடு தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு வழி செலவிற்கு பணம் கிடைத்தால் கூட போதும் என நினைத்து ரஜினிகாந்த் அவர்களிடம் சென்றதாகவும் ஆனால் சற்றும் யோசிக்காதவாறு ரஜினிகாந்த் தன்னுடைய சூழ்நிலையை கேட்டவுடன் 40000 எடுத்து தன்னிடம் கொடுத்து விட்டதாகவும் அந்த காலத்தில் 40 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்றும் ராம பிரபா நெகிழ்ச்சி பட தெரிவித்திருக்கிறார்.