ராமர் கோவிலின் மணியோசை எவ்வளவு தூரத்திலும் கேட்க இயலுமா?

Photo of author

By Parthipan K

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடத்தி அடிக்கல் நாட்டப்பட்டு கோயில் பணி தொடங்கப்பட்டது.இந்தக் கோயிலுக்கு உத்தரபிரதேச மாநிலம் ஜலேசர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் தவு தயால் மற்றும் இக்பால் மிஸ்த்ரி ஆகியோர் கோவிலுக்கு மணியை உருவாக்கி கொடுத்துள்ளனர்.

இந்த மணியானது 2 டன் எடை கொண்டுள்ளதாகவும்,
தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனை தனித்தனியான பாகங்களைக் கொண்டு பொருத்தப்படமால்,மொத்தமாக உலோகக் கலவையால் ஒரே பொருளாக உருவாக்கப்பட்டது என்று கூறினர்.

இந்த மணியின் ஒலி 15 கிலோமீட்டர் சுற்றளவு தொலைவிலும் கேட்கக் இயலும் என தவு தயால் மற்றும் இக்பால் மிஸ்த்ரி கூறினர்.