PMK : சில மாதங்களுக்கு முன்பு பாமகவில் இளைஞர் அணி தலைவர் நியமிப்பதில் பொது வெளியிலேயே அப்பா மற்றும் மகன் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தனை முன்னிறுத்தி இளைஞரணி தலைவராக அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த கணமே ராமதாஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேடையிலேயே இருவரும் மோதிக்கொண்ட நிலையில் அந்த இடத்தை விட்டு உடனடியாக ராமதாஸ் வெளியேறினார்.
ஒரு சில நாட்களில் தைலாபுரம் தோட்டத்தில் வைத்து இருவரும் சமாதானப்படுத்தப்பட்டனர். அதன்பின் இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். அந்த வகையில் நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடர்பான போஸ்டர்களும் அங்கு இடம்பெற்றுள்ளன.
அதில் பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. மேலும் அந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி , அடுத்த ஆண்டு கட்டாயம் கூட்டணி ஆட்சி தான் அமையும். நமக்கு இட ஒதுக்கீடு யாரும் தர வேண்டாம், நாமே எடுத்துக் கொள்வோம் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மாநாடு நடத்துவது குறித்தும் பேசினார். இவ்வாறு இருக்கையில் ஏன் அக்கா மகனுடன் சமரசமாக அன்புமணி தற்போது வரை முன் வரவில்லை. மேற்கொண்டு தனது பேச்சை கேட்காத யாரும் கட்சிக்குள் தேவையில்லை என நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துக்க கொள்ள விடாமல் முகுந்தனை புறக்கணித்து வந்தால் மீண்டும் கட்சிக்குள் பனி போர் நிலவி பிரிவினை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.