PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையில் உட்கட்சி மோதலானது தீவிரமடைந்த நிலையில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது அவர் கட்சி நிறுவனருக்கு எதிராக என்னென்ன செயல்களில் ஈடுபட்டார் என்பதை கூறி விவரித்துள்ளனர். மேற்கொண்டு இது ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அந்தத் தீர்மான வழியில் பாமக கட்சி ரீதியாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், வரும் 31ஆம் தேதிக்குள் அன்புமணி கட்டாயம் தான் செய்த செயல்முறைகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முறையாக விளக்கம் அளிக்கா விட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை தீவிர படுத்தப்படுமாம். அந்த வகையில் அன்புமணி பதிலளிக்க மாட்டார் என கட்சி வட்டாரங்கள் பேசுகின்றனர்.
அன்புமணி பதிலளிக்காவிட்டால் கட்டாயம் அவரை கட்சியை விட்டு நீக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் பொதுக்குழு கூட்டத்திலேயே அன்புமணியை கட்சியை விட்டு நீக்கும்படி கோஷங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அன்புமணி கட்சியை விட்டு நீக்கினால் கட்டாயம் விரிசல் உண்டாகும். அதிமுக வை போல பிளவுபட்ட அரசியலை தான் பார்க்க முடியும்.