திடீரென பாமக எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அதிமுக!

Photo of author

By Sakthi

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு காரணம் ஜெயலலிதா இல்லாததுதான் என்று சொல்லப்பட்டாலும் கூட இந்த தோல்வி அந்த கட்சியை மிகப் பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஏனென்றால் எம்ஜிஆர் மறைந்த சமயத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக என்ற ஒரு கட்சி இருக்கிறதா என்ற கேள்வி எழும் அளவிற்கு அந்த கட்சியின் தோல்வி இருந்தது.ஆனால் தற்சமயம் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பெரிய அளவில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு அதிமுக வெற்றி பெறாவிட்டாலும் எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்ந்து இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றன. அதுவும் பாஜக சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் 4 சட்ட சபை உறுப்பினர்களுடன் நுழைந்திருக்கிறது. அதேசமயம் பாட்டாளி மக்கள் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்து இருக்கிறது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி எத்தனையோ முறை தோல்வியை சந்தித்து விரக்தியின் உச்சத்திற்கு சென்றது. ஆனால் தற்சமயம் அந்த கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இந்த நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக அந்த கட்சியின் தலைவர் ஜிகே மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் களம் கொண்ட அதிமுக அறிமுகமில்லாத தலைவர்களை வைத்து தேர்தலை சந்தித்தது. அப்படி தேர்தலை சந்தித்தாலும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் செயல்பாடு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஓட்டு வங்கி என்று அனைத்தும் சேர்ந்து தமிழகத்தில் எதிர்க்கட்சியாக அதிமுகவை அமர்த்தியது என்றால் அது மிகையாகாது.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி திடீரென்று அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருப்பது அதிமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதாவது தமிழ்நாட்டில் இதுவரையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 9 மற்றும் ஆறு உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுக்க கட்சியின் தலைமை நிர்வாகிகள் 9 மாவட்ட துணை பொதுச்செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் காணொலிக் காட்சியின் மூலமாக பங்கேற்றவர்கள். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது என சொல்லப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து இன்றும் ,நாளையும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.