திருமாவளவனின் கீழ்த்தரமான அரசியல்!

0
134

சமீபத்தில் அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சாதி சாயம் பூசி பேட்டி கொடுத்தார். இது தமிழகத்தில் அனேக மக்களையும் கோபமடையச் செய்தது.இப்பொழுது அதே வழக்கை திருமாவளவனும் சாதி சாயம் பூசும் விதமாக பேட்டி கொடுத்திருக்கிறார். இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன் தேர்தலைத் தொடர்ந்து சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட அரக்கோணம் இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை வலியுறுத்துவதாக தெரிவித்தார். புகார் பெறாமலே சௌந்தரராஜன் கொடுத்த வாக்குமூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதை ஒரு புகார் என எடுத்துக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதிலும் அவர் தெரிவித்ததை முழுமையாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே காவல்துறை இதில் ஒரு சார்பாகவும், நோக்கத்துடனும், செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.

அரக்கோணம் பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலையில் சாதி சாயம் பூசி அரசியல் லாபம் பார்க்க முயற்சிக்கிறார் திருமாவளவன் என பல கண்டனங்கள் எழுந்திருக்கிறது.
அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் மற்றும் சாதி சாயம் பூசி தன்னுடைய சாதியை சார்ந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்கிற விதத்தில் பேசியிருக்கும் அவர் தேடிய நேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற இளம்பெண் காதலின் பெயரால் தான் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்திருப்பது அனைவர் மத்தியிலும் ஆத்திரத்தை கிளப்பும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு இளைஞன் ஒரு பெண்ணை தான் மட்டும் ஒரு தலையாக காதல் செய்துவிட்டு அந்த பெண் காதலிக்கவில்லை என்ற காரணத்திற்காக அந்த பெண்ணை கொலை செய்து இருக்கிறார். ஆனால் இதில் காதலின் காரணமாக தான் அந்தப் பெண் கொல்லப்பட்டிருக்கிறார் என்று தெரிவிப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும் ஒரு சிலர் தெரிவித்து இருக்கிறார்கள்.அதோடு அடிக்கடி உயர்சாதி வகுப்பினரை குறிப்பிடும் விதமாக சாதிவெறியர்கள் செய்யும் கொடூர செயல் என்று குறிப்பிடும் திருமாவளவனால் ஒரு பெண் தன்னை காதலிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கொலைசெய்த கொடூரக்காரர்களை எப்படி நியாயப்படுத்தி பேசமுடிகிறது?

இந்த விஷயத்தில் யாரிடம் சாதிவெறி இருக்கிறது என்பதை திருமாவளவன் யோசித்துப் பார்க்க வேண்டும். ஆனால் இவை எதையுமே யோசிக்காமல் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினரை மட்டும் சாதி வெறியர்கள் என்று தெரிவிப்பது அபாண்டமான செயல் என்ற குற்றச்சாட்டும் திருமாவளவன் மீது வைக்கப்படுகிறது.

அதோடு தன்னுடைய அரசியல் லாபத்திற்காக தேர்தல் அறிக்கையில் கூட சாதி சார்ந்த வாக்குறுதிகளை கொடுத்திருப்பது திமுக கூட்டணியும், திருமாவளவனும் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் அப்படி இருக்கையில் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக அவ்வப்போது சாதி சண்டைகள் தூண்டி விடுகிறார் என்று அவர் மீது குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியும் எழுகிறது.

அதேநேரம் அருவருப்பான அநாகரிகமான முறையில் அரசியல் செய்வது ராமதாஸ் அவர்களின் செயல் என்று திருமாவளவன் தெரிவித்திருப்பது எல்லோரையும் கோபமடைய செய்திருக்கிறது. அதாவது தேர்தல் அறிக்கையில் கூட சாதி என்ற ஒரு மையப் புள்ளி வைத்து அதிலிருந்து தேர்தல் அறிக்கையை தயாரித்து விட்டிருப்பது அருவருக்கத்தக்க செயலா? அல்லது எல்லோருக்கும் பொதுவான அரசியலை முன்னெடுப்பது அருவருக்கத்தக்க செயலா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இப்படித் தன் சமூக இளைஞர்களை தூண்டிவிட்டு அவர்கள் மூலமாக மற்ற வகுப்பினரை சார்ந்தவர்கள் இடையே பிரிவுகளை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் தேடும் திருமாவளவனின் அரசியல் வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்காது என்ற கருத்தும் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இப்படி திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்களுடைய அரசியல் பாவத்திற்காக இப்படிப்பட்ட அருவருப்பான காரியங்களை செய்து எப்படியாவது பொது மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி பதவிகளை அடைந்து விடலாம் என்று நினைக்கிறது. ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளாத தமிழக மக்கள் அவர்களிடம் ஓட்டை போட்டு விட்டு ஏமாந்து நிற்பதே தமிழக மக்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

Previous article15 நாளில் 1 கோடி இல்லையென்றால் ஜெயில் தான்! மருத்துவரை மிரட்டும் ரைசா!
Next articleதிடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்