ராமதாஸ் உயிருக்கு பெரும் ஆபத்து.. ஸ்கெட்ச் போடும் அன்புமணி பொண்டாட்டி!! அலர்ட் செய்த மணிகண்டன்!!

0
8
Ramadoss' life is in great danger.. Anbumani Pondati is drawing a sketch!! Manikandan who alerted!!
Ramadoss' life is in great danger.. Anbumani Pondati is drawing a sketch!! Manikandan who alerted!!

PMK: இன்றைய நாளில் ஹாட் டாபிக்காக பேசப்படுவது பாமக வின் அப்பா மகன் மோதல் குறித்துதான். தற்போது மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் காடுவெட்டி குருவின் உறவினரான விஜி கே மணிகண்டன் அன்புமணிக்கு எதிராக பேசியுள்ளார். இதில் அவர் கூறியதாவது, பாமகவை ஆரம்ப கட்டத்திலிருந்து பாடுபட்டு உருவாக்கிக் கொண்டு வந்தது ராமதாஸ் தான் அதனால் அக்கட்சியை எந்த வழியில் கொண்டு வர வேண்டும் என்ற பக்குவம் அவரிடம் உள்ளது.

அப்படி இருக்கையில் தற்போது வந்த அன்புமணி தன்னிடம் அனைத்து பொறுப்புகளையும் கொடுத்து விடுங்கள், உங்களுக்கு வயதாகிவிட்டது ஓய்வு பெற வேண்டும் என வன்முறையில் இறங்கிவிட்டார். இதனை பொறுக்க முடியாமல் தான் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் 1984 ஆம் ஆண்டு எப்படி கட்சி ஆரம்பித்து மக்களுக்காக செயல்பட்டேனோ அதேபோல் செயல்பட போகிறேன். மேற்கொண்டு எனது சொத்துக்களும் வன்னியர் அறக்கட்டளையின் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்கு கொடுக்கப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் காடுவெட்டி குரு உடல்நிலை சரியில்லாத போது வெளிநாட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. இது ரீதியாக ராமதாஸ் யிடம் பணம் கேட்ட பொழுது அவர் வெளிநாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை ரீதியாக அனைத்தையம் ஏற்பாடு செய்துவிட்டார். ஆனால் அதனை தடுத்ததே அன்புமணி தான். அவருக்கெல்லாம் ஏன் தர வேண்டும் எனக் கூறி ராமதாசை வாய் பேச முடியாமல் வைத்துவிட்டார்.

இதனால் காடுவெட்டி குரு தமிழகத்திலேயே சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. அவரை மருத்துவ கொலை செய்ததே ராமதாஸ் தான். இனி வரும் நாட்களில் இது ரீதியான உண்மையை ராமதாஸ் வழியே நாம் கேட்க முடியும். அதேபோல காடுவெட்டி குரு இறந்து கலவரம் ஏற்படாமல் இருக்க ஒரு வாரம் கழித்துதான் அவரது இறப்பை உறுதி செய்தார்கள். இதை அனைத்திற்கும் அன்புமணி தான் காரணம். தற்பொழுது மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. இனி வரும் நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

முக்கியமாக பல கோடி கணக்கான சொத்துக்கள், உள்ளது ஆனால் அது யார் பேரில் உள்ளது என்று தெரியவில்லை. இருப்பினும் அதன் ஆவணங்கள் அனைத்தும் அன்புமணியிடம்தான் இருக்கிறது. எனது ஆதரவு முழுவதும் ராமதாஸ்க்கு தான், அன்புமணிக்கு ஒருபோதும் கிடையாது என்று மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் விஜிகே மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ராமதாஸ் உயிருக்கு அவரது மகன் மற்றும் மருமகளால் பெரும் ஆபத்து உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Previous articleஉட்கட்சி மோதல்: சேலம் பாமக MLA பதவி விலகல்.. வெளியான பரபர அறிவிப்பு!!
Next articleஅதிமுகவுடன் மெகா கூட்டணி அமைக்குமா தவெக; ஹின்ட் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!!