“ஸ்டாலினைப் போல் அரசியல் ஞான ஒளி எனக்கில்லை” ராமதாஸ் வருத்தம் !!

Photo of author

By Sakthi

“ஸ்டாலினைப் போல் அரசியல் ஞான ஒளி எனக்கில்லை” ராமதாஸ் வருத்தம் !!

Sakthi

Ramadoss responded to Chief Minister Stalin's criticism in a press conference

Ramadoss:முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்தார் ராமதாஸ்.

அமெரிக்க நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்து இருந்தது. மேலும் இந்த ஊழல் வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்த அறிக்கையில் அதானி குழுமத்துடன் தொடர்புடையதாக தமிழக மின் வாரியம் உட்பட 20 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இந்த செய்தி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு ரகசியமாக சென்று  அதானி குழும தலைவர் கவுதம் அதானி சந்தித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு நவம்பர்-21 தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். ராமதாஸ் கேள்விக்கு அவர் வேலை இன்றி அறிக்கை வெளியிடுவார் என செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்து இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி “ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தனது கருத்தை பதிவு செய்து இருந்தார். இதற்கு ஆதரவாக பாஜக முக்கிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். சீமான்,அண்ணாமலை,தமிழிசை என முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருந்தார்கள். முதல்வர் ஸ்டாலின் இந்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் தமிழகம் முழுவதும் நவம்பர்-25 போராட்டம் நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் ஸ்டாலின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பிய போது அவரை போல் அரசியல் ஞான ஒளி எனக்கில்லை, வருத்தமாக இருக்கிறது என பதில் அளித்து இருந்தார். பாமக ராமதாஸின் பதில் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.