மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர் பேராசிரியர் அன்பழகன் : டாக்டர் ராமதாஸ் புகழாரம்

0
151

திமுகவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவர் பேராசிரியர் அன்பழகன். இவர் திமுகவின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகளாக இருந்து வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அவர் உடல்நிலை மேலும் குன்றியதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் திமுகவின் மூத்த உறுப்பினர்கள் அவரை சென்று நலம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக நேற்று தகவல் வெளியானது. உடனே திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்தார்.

மிகவும் மோசம் அடைந்த அவரது உடல் நிலையால் நள்ளிரவில் அவர் உயிர் பிரிந்தது. இது திமுக மற்றும் திராவிட கழகத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதன் பிறகு நள்ளிரவில் டாக்டர் ராமதாஸ் தனது இரங்கல் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

“திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

பேராசிரியர் அன்பழகன் மறைவிற்கு பல மூத்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleதிரௌபதி படத்திற்கு எதிராக களமிறங்கிய பிரபல யூட்யூப் சேனல் : உண்மையை வீடியோவுடன் வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநர்!
Next articleபேராசிரியர் அன்பழகன் மறைவை அடுத்து உடன்பிறப்புகளுக்கு திமுக வெளியிட்ட அதிரடி உத்தரவு!