PMK: தமிழக அரசியல் களமானது நிலைப்பாடற்ற தன்மையில் உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளோடு சமரசமாக இருக்கிறது என்று கூறினாலும் உட்கட்சிக்குள் மோதல் போக்கு ஓய்ந்தபாடில்லை. எதிர்கட்சியான அதிமுக வும் நான்கு திசை நோக்கி பிரிந்து காணப்படுகிறது. இதில் பாமக மட்டும் விதி விலக்கல்ல, அப்பா மகனுக்கிடையே மோதல் போக்கானது தீவீரமடைந்துள்ளது. இந்த பிரச்சனையானது தனது சகோதரி மகனுக்கு பதவி கொடுத்ததிலிருந்து தான் வெளிப்பட ஆரம்பித்தது.
அதன் முடிவானது இன்று அன்புமணியை கட்சியை விட்டே நீக்கம் செய்துள்ளனர். இதற்கு முன்பு இருவரும் தனித்தனியே பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர், அதில் ராமதாஸ் நடத்திய பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுரீதியாக பதிலளிக்கும் படி கூறியிருந்தனர். ஆனால் அதனை அன்புமணி சிறிதும் கூட கண்டுக்கொள்ளவில்லை. இதனால் அவரை கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கொண்டு அவரை புதுக்கட்சி தொடங்கி கொள்ளும் படியும் பரிந்துரை செய்துள்ளார். செயல் தலைவர் மட்டுமின்றி அடிப்படை பதவியில் கூட அன்புமணி இனி இருக்க கூடாது என்று முடிவெடுத்துள்ள ராமதாஸ், கட்டாயம் தனது மகளுக்கோ அல்லது மகள் வழி பேரனுக்கோ முக்கிய பொறுப்பை இச்சமயம் ஒதுக்கலாமாம்.
இதுரீதியான அறிவிப்புக்கள் இனி வரும் நாட்களில் வெளியிடப்படலாம். அதேசமயம் ராமதாஸின் இந்த அறிவிப்புக்கு அன்புமணி எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் உள்ளார். மாற்று கட்சி ஆரம்பிப்பாரா அல்லது பாமக கட்சி வேண்டி எதிர்த்து நிர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.