இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்!

Photo of author

By Parthipan K

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன் (வயது 94). இவருக்கு கடந்த மாதம் 27ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமகோபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.