ராமர் கோவில்! ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

மதுரையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிறையில், அதற்காக எல்லோரிடமும் பொருள் உதவி பெறுவதற்காக ரத யாத்திரையை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். மதுரையில் சுமார் 100 வார்டுகளில் யாத்திரை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் மனு கொடுத்தோம். ஆனால் வைரஸ் தொற்று காரணமாக, வைத்து ஊரடங்கு அமலில் இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எழும் என்று அனுமதி வழங்க மறுத்து விட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ளும் விஷயமாக படவில்லை. ஆகவே மதுரையில் ரதயாத்திரை நடத்துவதற்கு அனுமதி வழங்காத திலகர் திடல் உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார்.

இந்த வழக்கானது நீதிபதி ஹேமலதா முன்பாக நேற்றையதினம் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் உதவி காவல் ஆணையாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாக, காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரத யாத்திரை நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தர விடுவதாக தெரிவித்து அந்த வழக்கை முடித்து வைத்து இருக்கிறார். வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பது போன்ற சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.