ஆகஸ்ட் 5 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா! இத்தனை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.!!

Photo of author

By Jayachandiran

அயோத்தியில் ராமர் கோயில் கட்டிவதற்கான அடிக்கல் நாட்டுவிழா வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக அயோத்தி ராமர் கட்டுவது குறித்த தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியது இந்து பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்காக உருவாக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் கூட்டத்தில் பிரதமர் மோடியை அழைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க முடியாமல் போனால் ஆகஸ்ட் 3 ஆம் தேதியே அடிக்கல் நாட்டு விழாவை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த அயோத்தி ராமர் கோயில் கட்டுமான வேலைகள் மூன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது