மீண்டும் இணையும் ராமராஜன் – இளையராஜா கூட்டணி… ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
124

மீண்டும் இணையும் ராமராஜன் – இளையராஜா கூட்டணி… ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ராமராஜன் 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சாமான்யன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

1980 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்து, இன்று புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி ஓய்வில் இருப்பவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அவர் அதன் பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் 10 ஆண்டுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.  கடைசியாக அவர் நடித்த மேதை என்ற திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தில் ராமராஜனோடு அவரோடு ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய ரகேஸ் இயக்குகிறார்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தற்போது வெளியாகியுள்ளது. ராமராஜன் உச்சத்தில் இருந்த போது அவரின் படங்களுக்கு இசையமைத்து பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்தவர் இளையராஜா. அதனால் இளையராஜா மற்றும் ராமராஜன் ஆகியோரின் கூட்டணிக்கு அப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் இப்போது ராமராஜனின் ரி எண்ட்ரி படமான சாமான்யன் படத்துக்கும் இசையமைக்க இளையராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.