ராமராஜனின் சாதனைகள் ஏராளம்! கலர் கலரா சட்டை போட்டா உங்களுக்கு காமெடியா தெரியுதா?

0
34

பொதுவாக சாலையில் யாராவது பளிச்சென்று ரோஸ், சிவப்பு கலர் வண்ணங்களில் சட்டை போட்டுக்கொண்டு நடந்தால் டேய் அங்க பாருடா ராமராஜன் போறாரு என எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அந்த அளவுக்கு ராமராஜன் தமிழ்நாட்டில் பிரபலம். இவர் அணியும் உடையை வைத்து தான் எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அந்த கிண்டல்களை எல்லாம் தாண்டி அவர் எத்தனை சாதனைகளை படைத்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

கரகாட்டக்காரன் படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடியது. கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து 40 படங்களில் நடிக்க கமிட் ஆனார். தனது சினிமா வாழ்வில் சோலோ ஹீரோவாக 43 படங்களில் நடித்துள்ளார். 3 வருடங்களுக்கு ஹீரோவாக நடிக்க housefull புக்கான நடிகரும் இவர் தான்.

அரசியலில் MP யாக மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராமராஜன். கமலை விட அதிகமாக கௌதமியுடன் ஜோடி போட்டு நடித்தவர் ராமராஜன் (6 படங்கள்). சினிமாவில் வாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் இவருடைய உடையை அயர்ன் செய்ய ராமராஜனின் மேலாளர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அயர்ன் செய்யும் கடைக்கு எடுத்து சென்றுள்ளார்.

அப்போது அந்த அயர்ன் பண்ணும் நபர் என்ன இப்படி ஜொலிக்குது, இது என்ன ராமராஜன் சட்டையா என்று கேட்டுள்ளார். உண்மையிலேயே இது ராமராஜன் சட்டை தான் என்று அவரின் மேலாளர் சொல்லிவிட்டு சட்டையை வாங்கி வந்துள்ளார். அந்த அளவுக்கு ராமராஜன் சட்டை ரொம்ப பேமஸ்.

Previous articleமுருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறாரா? வெளியான பரபரப்பு தகவல் 
Next articleமுருக பக்தர்கள் மாநாடு! வண்டி வண்டியாக வந்து குவியும் மக்கள் கூட்டம்!