PMK BJP: தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் தனது தமிப்பெருமான்மையை இழந்து வருகிறது. அதிமுக கட்சிக்குள்ளேயும் உட்கட்சி மோதல் தீவீரமடைந்துள்ளது. அதேபோல பாமக தற்சமயம் இரு அணிகளாக பிரியும் சூழலில் நிற்கிறது. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் சம்மந்தப்பட்டவர்கள் எப்படி டெல்லி சென்றார்களோ அதேபோல பாமக தனது உட்கட்சி பிரச்சனையை முடிக்க அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது எடப்பாடி அமித்ஷாவை சந்தித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. தனது நிலைப்பட்டிலிருந்து மாறுவதாக தெரியவில்லை. ஒருபோதும் ஓபிஎஸ் டிடிவி சசிகலா தற்சமயம் செங்கோட்டையன் உள்ளிட்டவர்களை தனது இணக்கத்தில் வைக்க மாட்டேன் என்பதில் தீர்க்கமாக உள்ளார். அதே பிரச்சனை தான் தற்போது பாமக-விழும் நிலவி வருகிறது. வாரிசு அரசியலை கொண்டு வர வேண்டாம் என்று எதிர்த்த அன்புமணி தனது மனைவியை மட்டும் ஏன் தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இதை முன் வைத்துதான் ராமதாஸ் மகள் வழி பேரனுக்கு பொறுப்பு வழங்கினார். ஆனால் அங்கிருந்து தான் அதிகார மோதலே உச்சத்தை எட்ட தொடங்கியது. அதிலிருந்து தனித்தனியே நிர்வாகிகளை அமர்த்துவது, நீக்குவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தனர். அதுமட்டுமின்றி இரு பொதுக்குழு கூட்டம் நடந்ததோடு அன்புமணி நடத்தியத் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று வழக்கும் தொடரப்பட்டது.
அத்தோடு விடாது ராமதாசும் தனது பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றி பதிலளிக்கும் படி கெடு வைத்தார். ஆனால் அன்புமணி எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் கெடு தேதி முடிந்ததும் அன்புமணியை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இதற்கிடையே தேர்தல் ஆணையத்திடமிருந்து 2026 வரை அன்புமணி தான் கட்சியின் தலைவராக தொடர்வார் என்று கடிதம் வந்துள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு கூறியது அனைவரும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
ஆனால் அது முற்றிலும் பொய், அப்படியொரு தகவலை இவர்களே சித்ரித்திருப்பதாவும் அலுவலக இடத்தின் முகவரியை அன்புமணி மாற்றியுள்ளதாக அவர் மீது தொடர் குற்றம்ச்சாட்டை ராமதாஸ் தரப்பு வைத்து வருகின்றனர். இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக தான் தற்சமயம் ராமதாஸ் அமித்ஷாவை சந்தித்து அவர்களது ஆதரவை பெற உள்ளாராம். இது ரீதியாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் போது தான் தெரிய வரும்.