நாட்டையே உலுக்கிய பிரியங்கா கொலை வழக்கு:உருவாகும் திரைப்படம்! முன்னணி இயக்குனர் அறிவிப்பு!
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்கா சம்பவத்தைத் திரைப்படமாக எடுக்க இருக்கிறார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்மந்தமாக நால்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான நால்வரும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டிய சொல்லப்பட்டது. அப்போது நால்வரும் தப்பி செல்ல முயன்றதாக சொல்லி காவல்துறையினர் நால்வரையும் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இந்த என்கவுண்ட்டருக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர வந்தது. நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு நாட்டையே உலுக்கிய பாலியல் கொலை சம்பவமாக பிரியங்கா வழக்கு அமைந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா திஷா என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப் போவதாக அறிவித்தார்.இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ’ திஷா படத்தில் பாலியல் கொலைகளின் போது வெளிவராத உண்மையை பேசப்போவதாக அவர் சொல்லியுள்ளார். ராம்கோபால் வர்மா இந்த திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளதால் திஷா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளார்.