ராமநவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : 130க்கும் மேற்பட்டோர் கைது!!

0
240
#image_title

ராமநவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : 130க்கும் மேற்பட்டோர் கைது!!

பீகார் மாநிலம் நாலங்லதா மாவட்டத்தில் கடந்த மார்ச் 30 அன்று ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பினர் கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

நிலைமையை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு போடப்பட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் , வன்முறை தொடர்பாக 15க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு , 130க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் , பொது மக்கள் தங்கள் கடைகள் மற்றும் வணிகங்க நிறுவனங்களை மீண்டும் திறக்க நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று பீகார் நாலந்தா டிஎம் ஷஷாங்க் ஷுபாங்கர் தெரிவித்துள்ளார்.

வன்முறையில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன , வாகனங்களுக்கு தீயிடப்பட்டது.இதனை அடுத்து நிலைமையை கட்டுப்படுத்த , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் மீண்டும் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வன்முறையை அடுத்து , அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த போதிய துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Previous articleதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை-யில் இருந்த ஒருவர் பலி!!
Next articleபேரிடர் மீட்புக்கான செயல்பாடுகள் தனித்து இல்லாமல் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி!!