கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன்!மோகன் ராஜாவின் பலே திட்டம் !

0
140

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன் ! – மோகன் ராஜாவின் பலே திட்டம் !

அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் வில்லியாக நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியானத் அந்தாதூன் திரைப்படம் வெற்றி பெற்றது. நெட்பிளிக்ஸில் வெளியான பின்பு அது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.  

இதையடுத்து அந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

இந்நிலையில் தமிழ் ரீமேக்கில் தன்னுடைய மகனையே நடிக்க வைக்க அவர் முடிவு செய்து இயக்குனரை தேடிக் கொண்டிருந்தார். முதலில் கௌதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இப்போது ரீமேக் இயக்குனர் எனப் பெயர்பெற்ற மோகன்ராஜாவிடம் அந்த வாய்ப்பு சென்றுள்ளது. இந்த படத்துக்காக தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்துள்ளார் பிரசாந்த்.

இந்நிலையில் அந்தாதூண் படத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராக இருந்தவர் நடிகை தபு. தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களிடம் திட்டு வாங்கிய அந்த வில்லிக் கதாபாத்திரத்தை தமிழில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் இப்போது ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க இயக்குனர் மோகன் ராஜா முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக பாகுபலி, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களால் கலக்கி வரும் ரம்யா கிருஷ்ணனே அந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவராக இருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.

Previous articleசீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ்!பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு !
Next articleதலைவர் 168 படத்தின் கதை இது தான்: யூகித்த நெட்டிசன்கள்