ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும்! காயம் அடைந்த இளம்பெண் பேட்டி!!

Photo of author

By Sakthi

ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும்! காயம் அடைந்த இளம்பெண் பேட்டி!
மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த கோரத் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று கோரத் தாக்குதலில்  காயமடைந்த இளம்பெண் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி அஜ்மல் கசாப் உள்ளிட 10 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிக்கி 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகத்தையே பரபரப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
இந்த கோரத் தாக்குதலுக்கு காரணமான கனடா நாட்டு தொழிலதிபர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அந்த தாக்குதலில் காயமடைந்த இளம்பெண் இந்த சம்பவம் குறித்தும் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவது பற்றியும் பேட்டி அளித்துள்ளார்.
மும்பை தாக்குதலில் காயமடைந்த இளம்பெண் தேவிகா நட்வர்லால் “மும்பையில் இந்த கோரத் தாக்குதல் நடக்கும் பொழுது நான் 9 வயது சிறுமி. தாக்குதலின் பொழுது என் மீதும் குண்டு பாய்ந்தது,என் கண்முன்னே பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ராணா இந்தியா அழைத்து வரப்பட உள்ளார். அமெரிக்கா நீதிமன்றம் அவரை இந்தியா அழைத்து வர ஒப்புதல் அளித்ததை நான் வரவேற்கிறேன். இவரை இந்தியா அழைத்து வந்து தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் நான் மகிழ்ச்சி அடைவேன். அவரை அழைத்து வந்து ஜெயிலில் போடுவதால் எந்த ஒரு பலனும் இல்லை. தாக்குதல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ராணா மூலமாக வெளிவர வேண்டும். டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட ராணா அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவரின் தண்டனையை பார்த்து நம் நாட்டில் வேறு யாரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடக் கூடாது” என்று அவர் கூறினார்.