கதற கதற செஞ்சாரு.. காவல் நிலையத்தில் இளம் பெண் குமுறல்!! “ரஞ்சிதமே”நடன இயக்குனர் தலைமறைவு!!  

Photo of author

By Rupa

 

 

 

ஒரு படத்தின் பாடல் மிகப்பெரிய ஹிட்டாகிறது என்றால் அதனின் முக்கிய பங்கு நடன இயக்குனரையும் சேரும். அந்த வகையில் ஜானி மாஸ்டர் தான் தற்பொழுதைய ட்ரெண்டில் நம்பர் 1 என்றே கூறலாம். விஜய்யின் ஹல மத்தி ஹபிபோ எனத் தொடங்கி மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே தனுஷின் பாடல்கள் வரை  மிகப்பெரிய ஹிட். இதனை தொடர்ந்து ரஜினியின் காவலா காவலா சாங் ஸ்டெப்ஸ் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

தற்பொழுது இவர் மீது அவர் நடன குழுவில் உள்ள பெண்ணொருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஜானி மாஸ்டர் தனக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும், வெளி இடங்களுக்கு ஷூட்டிங் செல்லும்போது அவரது வீட்டில் வைத்து அடித்து பாலியல் ரீதியாக தொல்லைகள் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

இவ்வாறு இவர் மீது புகார் வந்ததையடுத்து ஜன சேன கட்சியிலிருந்த இவரை  தற்பொழுது அடிப்படை பதவியிலிருந்தே நீக்கம் செய்துள்ளனர். மேலும் இவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளதால் தற்பொழுது தலைமறைவாகி உள்ளார்.மேற்கொண்டு இவரை போலீசார் தேடியும் வருகின்றனர்.