ஏழு பெண்களை கடத்தி கற்பழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்! நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்.

0
416

ஏழு பெண்களை கடத்தி கற்பழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்! நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்.

கல்லூரி பெண் உட்பட ஏழு பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து மிரட்டி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் அதிர்ச்சியில் தமிழகம்.

சேலம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ளார். சொந்தமாக இரு ஆட்டோக்களை வைத்துள்ள மோகன்ராஜ், ஒரு ஆட்டோவை கூட்டாளிக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு ஒரு ஆட்டோவை தானே ஓட்டி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மோகன்ராஜின் ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் ஒருவர், மோகன்ராஜ் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் படுக்கைக்கு அழைத்து மிரட்டி வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் செல்வாக்குடன் கெத்தாக வலம் வந்த ஆட்டோ மோகன்ராஜை கொத்தாக பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவன் ஒரு சீரியல் ரேப்பிஸ்ட் என்ற திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், அவன் 7 பெண்களை பலவந்தமாக மிரட்டி பலாத்காரம் செய்த வீடியோ காட்சிகள் பதிவாகி இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்து போயினர். அந்த வீடியோக்களில் 6 பேர் குடும்ப பெண்கள் என்பதும் ஒருவர் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது.

ஆட்டோவில் தனியாக வரும் பெண்களிடம் நல்லவன் போல நடித்து குடும்ப நிலவரத்தை விசாரிப்பது. பண பிரச்சனையில் இருக்கும் பெண்கள் என்று தெரிந்தால் பணம் கொடுத்து உதவுவது போல நடித்து தனது வீட்டிற்கு அழைத்து செல்வான் என்றும்,

அங்கு அவர்களை கடுமையாக மிரட்டி அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தான் விரும்பிய நேரத்தில் அந்த பெண்களை தனது வீட்டுக்கு வரவழைத்து தனது இச்சையை தீர்த்துக் கொள்வான் என்கின்றனர் காவல்துறையினர்.

அந்தவகையில் பல பெண்களை வேட்டையாடிய கொடூரன் ஆட்டோ மோகன்ராஜின் அட்டூழியம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்ததற்கு அவனது அரசியல் செல்வாக்கும் அடாவடியான நடவடிக்கைகளுமே காரணம் என்றும் பலாத்கார வீடியோவை காட்டி பெண்களிடம் அவன் நடந்து கொள்ளும் விதம் மிகவும் கொடூரமாக இருக்கும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

இவனிடம் சிக்கிய 7 பேர்களில் ஒரு பெண்ணை காணவில்லை, அந்த பெண் குடும்பத்துடன் ஊரை காலி செய்து சென்றுவிட்டதாக, போலீசாரிடம் மோகன்ராஜ் தெரிவித்துள்ள நிலையில் அந்த பெண்ணின் கதி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

காமுகன் ஆட்டோ மோகன்ராஜுக்கு 2 மனைவிகள் என்றும் முதலில் ஒரு பெண்ணை கதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இவனது தொல்லை தாங்க முடியாமல் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

அதனை தொடர்ந்து நண்பனின் வீட்டுக்கு சென்று வந்த போது அவனது மனைவியை 2 வது தாரமாக மயக்கி திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த பெண்ணும் இவனது அட்டகாசம் தாங்காமல் விட்டுச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவன் மட்டுமல்லாமல் இவனுடன் ஆட்டோ ஓட்டும் மற்றொரு கூட்டாளியும் இது போல பல பெண் பயணிகளை மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகின்றது அவனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல நடித்து தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த மேட்டூர் பகுதியை சேர்ந்த சபரி அபிசேக் என்பவனை 24ந்தேதி கைது செய்த காவல்துறையினர் அவனது செல்போனில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றினர். இந்த நிலையில் 25ந்தேதி காமுகன் ஆட்டோ மோகன் ராஜ் சிக்கி இருக்கிறான்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleஇந்தியா-பாகிஸ்தான் இடையே போருக்கு வாய்ப்பா? இம்ரான்கான் என்ன சொல்கிறார்
Next articleஉள்ளாட்சி தேர்தல் உறுதியானது! நவம்பரில் தமிழக மக்களுக்கு திருவிழா