தள்ளாத வயதில் சிறுமியிடம் அத்துமீறல் !.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்?!!
விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி அங்குள்ள வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவரான மணி என்பவர் அங்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிறுமியிடம் மிட்டாய் தருவதாக கூறி விளையாடிக் கொண்டிருந்த இடத்தை விட்டு தன் வீட்டிற்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அக்குழந்தையை குளிப்பாட்டி விடுகிறேன் என்று தகாத செயலில் ஈடுபட்டுள்ளார். குழந்தை அவ்விடத்தை விட்டு அழுது கொண்டே தன் வீட்டிற்கு ஓடி வந்தது.
குழந்தை அழுததைப் பார்த்த பெற்றோர்கள் எதற்காக அழுகிறாய்?என்று கேட்டார்கள். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்ததை பெற்றோர்களிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மணியை விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதி முழுக்க சலசலப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து காவல் துறையினர் பெற்றோர்கள் அனைவரும் தன் குழந்தைகளுக்கு புரியும் வகையில் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொண்டது.