கொரோனாவை கண்டறியும் ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை தமிழகத்தில் இல்லை – சுகாதாரத் துறை அறிவிப்பு!

Photo of author

By Kowsalya

கொரோனாவை கண்டறியும் ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை தமிழகத்தில் இல்லை – சுகாதாரத் துறை அறிவிப்பு!

அரை மணி நேரத்தில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் பரிசோதனை தமிழகத்தில் இல்லை என சுகாதாரத் துறை அறிவிப்பு.

ஆர்டிபிசிஆர் சோதனைகள் தான் கொரோனாவை உறுதி செய்ய மிகவும் சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதன் சோதனை முடிவுகள் இரண்டு நாட்கள் கழித்தே தெரியவரும்.

எனவே அனைத்து மாநிலங்களும் ராபிட் ஆன்டிஜன் பரிசோதனையை பின்பற்றலாம் ஐசிஎம்ஆர் என கூறியது.

கடந்த ஜூன் 14 அன்று இது தொடர்பான வழிகாட்டுதல் ஐசிஎம்ஆர் தந்துள்ளது.

இதன்மூலம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மற்றும் பகுதிகளில் ராபிட் ஆன்டிஜன் முறை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

இதன்படி ராபிட் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் இந்த பரிசோதனைகள் அதிகமாக எடுக்கப்பட்டன.

தமிழகத்திலும் ராபிட் ஆன்டிஜன் முறையை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது. பல்வேறு தரப்பினரும் ராபிட் ஆன்டிஜனை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இப்பொழுது ராபிட் ஆன்டிஜன் முறை பயன்படுத்தப் போவதில்லை என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.