அரியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!!

0
110
#image_title

அறியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!!

அழிந்து வரும் உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ள உத்தமன்ஸ் ரீட் புஷ் ( புதர் தவளை) எனும் அரிய வகை தவளையானது மூணாறில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அறியவகை தவளையானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடியது. இதனை அடுத்து கேரளாவில் உள்ள கோழிக்கோடு காக்கயம் பகுதியின் வனத்துறை, துணைப்பாதுகாவலர் “உத்தமன்” இதை முதன்முதலில் அங்கு கண்டறிந்தார்.

வனத்துறை பாதுகாப்பாளர் உத்தமன் அவர்கள் இந்த தவளையை கண்டறிந்ததால் இந்த தவளைக்கும் உத்தமன்ஸ் ரீட் புஷ் என்ற பெயர் வழங்கப்பட்டது.

இந்த தவளையின் தோற்றமானது ஒரு அங்குலம் நீளமும்,10 கிராம் எடை மட்டுமே கொண்ட ஒரு சிற்றினத்தை சேர்ந்த தவளையாகும்.

இந்த தவளையானது மலைகளில் நீர் நிறைந்த இடங்களில் வளரும் மூங்கில் மற்றும் நாணல் ஆகியவற்றில் வாழும் தன்மை கொண்டது.

இப்போது இந்த அறியவகை தவளையானது மூணாறில் அமைந்துள்ள லட்சுமி எஸ்டேட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

Previous articleஒரு பக்கம் ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனதால் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்!!! இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ள லியோ படக்குழு!!! 
Next articleதண்ணீரில் பந்தை எவ்வளவு பொத்தி வைத்தாலும் அது மேலே வரும்!!! நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!