நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு லவ்வுன்னு பதிலளித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்!

Photo of author

By Vijay

நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு லவ்வுன்னு பதிலளித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ரசிகர்களால் செல்லமாக தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்யை பிடிக்காத ஆட்கள் இந்திய திரையுலகில் யாவரேனும் உண்டா, அவருடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது அணைத்து நடிகர்களுக்கும் ஒரு ஆசை இருக்கும், அது போன்ற ஆசையை நிறைவேற்றி கொண்டார் ஒரு நடிகை.

தென்னிந்திய சினிமா நடிகைகளில் தற்போது மிகவும் பிரபலமான நடிகை என்றால் அது ராஷ்மிகா மந்தனா தான், கன்னட திரைப்படம் ஒன்றில் அறிமுகமாகி, அதன் பின் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, என குறுகிய காலத்தில் மிகவும் பிரபலம் அடைந்தவர், தமிழ் திரைப்பட நடிகர் கார்த்தியின் சுல்தான் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலம் அடைந்தவர், இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படம் தமிழில் வெளியாகி, தமிழ் ரசிகர்களில் நெஞ்சில் இடம் பிடித்தார் ராஷ்மிகா.

ஒருமுறை அவரிடம் தமிழில் நீங்கள் யாருடன் நடிக்க ஆசை என்று கேட்டபோது தளபதி விஜயுடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது எனது கனவு என்று கூறினார். இதையடுத்து அவரின் கனவை நனவாக்கும் வகையில் தளபதி விஜயின் வாரிசு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார், குறிப்பாக அந்த படத்தில் வரும் ரஞ்சிதமே என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது இதில் விஜய்க்கு சமமாக நடனம் ஆடி இருப்பது அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் நேற்று ரசிகர் ஒருவர் விஜய் பற்றி ஒரு வார்த்தையில் பதில் கூறுங்கள் என்று கேட்ட கேள்விக்கு நச்சுனு ஒரு பதில் அளித்துள்ளார். லவ் என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும் தளபதி விஜய்க்காக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாகவும் மற்றபடி வேறொன்றும் இல்லை எனவும் ராஷ்மிகா மந்தனா கூறினார்.