ரசிகர்களுடன் செல்பி எடுத்த ராஷ்மிகா!! அப்போது ஒரு ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்!! 

0
133
Rashmika took a selfie with her fans!! Then a fan did a shocking act!!
Rashmika took a selfie with her fans!! Then a fan did a shocking act!!

ரசிகர்களுடன் செல்பி எடுத்த ராஷ்மிகா!! அப்போது ஒரு ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்!! 

படப்பிடிப்பின் போது நடிகை ராஷ்மிகா புகைப்படம் எடுக்கையில் ரசிகர் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கீதா கோவிந்தம் படத்தில் அறிமுகமாகி பின்னர் புஷ்பா, வாரிசு போன்ற படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ராஷ்மிகா மந்தனா. இப்போது அவர் நடித்த புஷ்பா 2  அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது.

இவர் தற்போது சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் என்ற படத்தில் நடித்து  உள்ளார். இந்த படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இந்த சூழ்நிலையில் அவர் வர்த்தக விளம்பர படபிடிப்பு ஒன்றில் கலந்துக் கொள்ள அவர் மும்பைக்கு சென்ற நிலையில் அங்கு ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

தனது ரசிகர்களை காணும்போது ராஷ்மிகா புன்னகையுடன் இருப்பது வழக்கம். அதேபோல தனது கேரவனை விட்டு வெளியே வந்த அவர் ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்தார்.

கருப்பு நிற ஆடையுடன் காணப்பட்ட அவர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர்களுடன் உரையாடினார்.வரிசையாக புகைப்படங்கள் எடுக்கையில் ஒரு புகைப்படத்திற்கு தயாராக ரசிகர் ஒருவரின் மொபைல் போனை கையில் பிடித்து இருந்தார்.

https://www.instagram.com/reel/CuhIZzsqf0G/?utm_source=ig_web_copy_link

பின்னர் படம் எடுக்குமாறு கூறுகையில் அந்த ரசிகருக்கு என்ன அவசரமோ உடனடியாக போனை பறித்துக் கொண்டார். இதில் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் திறமையாக சூழ்நிலையை கையாண்டு சிரித்தபடியே இருந்தார்.

அமைதியாக இருந்த அவர் அடுத்த ரசிகருடன் படம் எடுக்க தயாரானார். இது அவரது எளிமையையும், பெருந்தன்மையையும் காட்டுகிறது என ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleநாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
Next articleஆறு பேர் கொண்ட ஹெலிகாப்டர் திடீர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!!