இந்த ராசிக்காரர்கள் இன்று நிச்சயம் இதை செய்ய கூடாது! இன்றைய ராசிபலன் 02.08.2020

Photo of author

By Anand

இன்றைய நாள்:

02-08-2020, ஆடி மாதம், 18 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை.

நல்ல நேரம்:

இராகு காலம் – மாலை 04.30 முதல் – 06.00 வரை

எம கண்டம் – பகல் 12.00 முதல்  – 01.30 வரை

குளிகன் – பிற்பகல் 03.00 முதல் – 04.30 வரை

ஒவ்வொரு ராசிக்கரர்களுக்கும் இன்றைய ராசிப்பலன் – 02.08.2020

மேஷம்

மேஷ  ராசிக்காரர்களாகிய உங்களுக்கு உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மேலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நல்ல காரியங்கள் நடக்கும். ஆடை,ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களாகிய உங்களுக்கு உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும், பொறுமையாக செயல்பட்டால் நீங்கள் செய்து வரும் தொழிலில் உள்ள சிக்கல்கள் பெரும்பாலும் நீங்கும். தேவையில்லாத தொந்தரவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு ஒரு சில பாதிப்புகள் ஏற்படலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களாகிய நீங்கள் மற்றவர்களின் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது தற்போது நல்லது. மேலும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். நீங்கள் செய்து வரும் வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனம் தேவை. மேற்கொண்டு எடுக்கும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களாகிய உங்களுக்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் தற்போது ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் சுபச் செய்திகள் நடைபெற வாய்ப்புள்ளதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். மேலும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உங்களுக்கு உறவினர்கள் மூலம் சில உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களாகிய நீங்கள் உங்களின் உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை பெரும்பாலும் தவிர்க்கலாம். குறிப்பாக பிற மொழியை சேர்ந்தவர்களால் உங்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உங்களிடம் உள்ள சிறிய தொகையை செலவிட வாய்ப்புகள் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாக வாய்ப்புள்ளது. உங்களுக்கு எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சில தடைகளுக்குப் பின்னர் கிடைக்கலாம். உங்களுடைய பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உருவாக வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு செலவுகள் ஒரு கட்டுப்பாட்டில் இருக்கும். வியாபாரம் தொடர்பாக உங்களுக்கு தற்போதுவரை இருந்த போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். உங்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களுடைய நண்பர்கள் வழியாக சுபச் செய்திகள் வந்து சேரும். வெளியூர் பயணங்களால் உங்களுக்கு அனுகூலம் உண்டு. பெண்கள் வீட்டுத் தேவையானவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களாகிய உங்களுக்கு மனைவிவழி உறவினர்களால் அனுகூலப் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆடை,ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். மனதில் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். வீட்டில் திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்க வழி பிறக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களாகிய நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற உங்களுடன் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் உங்களுக்கு அனுகூலம் உண்டு. உற்றார்,உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்க பெறும். உங்களின் திட்டமிட்ட செயல்களில் சிறு தாமதங்கள் ஏற்படலாம். நீங்கள் செய்து வரும் வியாபாரத்தில் நண்பர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களாகிய நீங்கள் உங்களுடைய வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தொடர்ந்து கிடைக்கும். கடவுள் வழிபாடு உங்களுக்கு நல்லதை கொடுக்கும். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உங்களின் உடல்நிலையில் சற்று மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களாகிய உங்களுக்கு பொன் பொருள் சேரும். வீட்டிலுள்ள கடன்கள் குறையும். மேலும் வீட்டில் சுப செலவுகள் உண்டாகும். உங்களின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உடலில் இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் தற்போது சீராகும். மற்றவர்களிடம் கொடுக்கல் வாங்கல் ஓரளவு சிறப்பாக நடைபெறும்.

மீனம்

மீன ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பணவரவு சிறப்பாக அமையும். உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுடைய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் போதுமான வெற்றி கிடைக்கும். இன்று எதிலும் சுறுசுறுப்புடன் நீங்கள் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகையானது உங்களுக்கு இன்று மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் நண்பர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படலாம்.