சமையல்காரருக்கு 1 கோடி!.. வளர்ப்பு நாய்க்கு 12 லட்சம்.. ரத்தன் டாடா எழுதிய உயில்…

Photo of author

By அசோக்

சமையல்காரருக்கு 1 கோடி!.. வளர்ப்பு நாய்க்கு 12 லட்சம்.. ரத்தன் டாடா எழுதிய உயில்…

அசோக்

tata

இந்தியாவின் இருந்த தொழிலதிபர்களில் முக்கியமானவர் ரத்தன் டாடா. அப்பா விட்டு சென்ற தொழிலை திறம்பட நடத்தி டாடா குழுமத்தை உலகமெங்கும் விரிவுபடுத்தியவர் இவர். வாகனங்கள் தயாரிப்பது முதல் பல்வேறு தொழில்களில் டாடா நிறுவனம் சிறந்து விளங்கியது 2024ம் வருடம் அக்டோபர் மாதம் இவர் மரணமடைந்தார். பொதுவாக பெரும் தொழிலதிபர்கள் இறந்தால் பொதுமக்களிடம் அனுதாபமே இருக்காது. ஆனால், இவர் இறந்து இந்தியாவில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் அனுதாபம் தெரிவித்தார்கள். பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் இவரின் இறப்பு பற்றிய செய்தியே இருந்தது.

அதற்கு காரணம் மற்ற பணக்காரர்கள் போல் இல்லாமல் டாடா எளிய மக்களுக்காக யோசித்தார். அவர்கள் சுலபமாக வாங்கும்படியான பொருட்களை உற்பத்தி செய்தார். உலக சந்தையில் இந்தியாவின் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டிருந்தார். அதனால்தான் அவருக்காக மக்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், ரத்தன் டாடா எழுதிய உயில் தொடர்பான விபரங்கள் வெளியே கசிந்துள்ளது.

rathan tata
rathan tata

தனது செல்வத்தின் பெரும் பகுதியை ரத்தன் டாடா தனது அறக்கட்டளைக்கு விட்டு சென்றிருக்கிறார். டாடா தொடர்பான பங்குகளின் மதிப்பே 1684 கோடி என சொல்லப்பாடுகிறது. இது எல்லாம் அறக்கட்டளைக்கே சொந்தம். இதுபோக 3900 கோடி சொத்துக்கள் அவருக்கு இருக்கிறது. இவை அவரின் உறவினர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்படி உயில் எழுதியிருக்கிறார். இதில், தன்னுடைய வளப்பு நாயையும் அவர் மறக்கவில்லை. செல்லப்பிரணிகளின் பராமரிப்புக்கு 12 லட்சம் எழுதி வைத்துள்ளார். காலம் முழுவதும் அது கிடைக்க வேண்டும் எனபதற்காக மாதா மாதம் 30 ஆயிரம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். அவர் உயில் எழுதிய மற்ற விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டிக்கிறது.

சமையல்காரர் ராஜன் ஷாவுக்கு ரூ.1 கோடி ரூபாய்..

உணவு பரிமாறும் வேலை செய்த சுப்பையாவுக்குல் ரூ.66 லட்சம்

உதவியாளர் சாந்தனு நாயுடு படிப்புக்காக வாங்கிய 1 கோடி கடன் ரத்து.

டிரைவர் ராஜூ லியோனுக்கு 1.5 லட்சம். அவர் வாங்கிய 18 லட்சம் கடன் ரத்து..

பக்கத்து வீட்டுக்காரர் ஜேக் மலைட் படிப்புக்காக வாங்கிய 23.7 லட்சம் கடன் ரத்து.

வீட்டு பராமரிப்பாளருக்கு 2 லட்சம், செயலாளருக்கு 10 லட்சம் என ரத்தன் டாடா உயில் எழுதியிருக்கிறார்.