சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படம் 1600 கோடி வசூலை பெற்றது. இந்தப் படம் நடிகரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. மேலும் இப்படம் வெளியான சமயத்தில் நடிகரும் படத்தை பார்க்க வந்ததை அறிந்த ரசிகர்கள் அத்தியட்டரை சுற்றி கூட்டம் கூட்டமாக முற்றுகையிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார்.
மேலும் அவரது மகனும் மூளைச் சாவு அடைந்த நிலையில் அச்சிறுவனும் இறந்தான். இதனால் ஆத்திரமடைந்த கணவர், நடிகர் அல்லு அர்ஜுனின் மீது புகார் பதிவு செய்து பிரச்சனை ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இந்த நிலையில் தான், ஹீரோக்களை வழிபடும் படத்தை தவிர கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கலாம் என்றார் ஹைதராபாத் உயர் துணை அதிகாரி விஷ்ணு மூர்த்தி. இயக்குனர் பா.ரஞ்ஜித் போன்றவர்கள் இயக்கிய படங்களுக்கு ரூ.2000 முதல் 4000 ரூபாய் வரை செலவழிக்கலாம் என்றார்.
தமிழ் சினிமாவில் மெட்ராஸ், கபாலி, காலா, சர்பட்டா பரம்பரை மற்றும் தங்கலான் போன்ற வெற்றி படங்களை இயக்கி உள்ளார். இவர் தயாரிப்பாளர் ஆகவும் உள்ளார். தற்சமயம் சர்பட்டா பரம்பரை 2 படத்தை இயக்குகிறார் என்றார். ஏற்கனவே உயர் அதிகாரி விஷ்ணு சஸ்பென்டில் உள்ளார். இந்நிலையில் இவரது இந்த பேட்டி பெரும் வைரலாகி வருகிறது.