ரேஷன் அட்டை மற்றும் பான் கார்டு எண் பதிவேற்றம் செய்ய வேண்டும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சிகளில் வரி வசூலை கொண்டுதான் பணியாளர்களுக்கு சம்பளம், நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.நடப்பாண்டுகளுக்கான நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இதற்காக நீண்ட காலமாக வரி நிலுவை வைத்துள்ள வணிக நிறுவனங்கள் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வரி விவரங்கள் அனைத்தையும் ஒரே சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குடியிருப்பு சொத்து வரியினங்களுக்கு ரேஷன் கார்டு வணிக பயன்பாட்டு வரியினங்களுக்கு பான் கார்டு அல்லது ஜிஎஸ்டி எண்னை ஒரு மென்பொருள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் நூறு சதவீதம் சொத்து வசூலை நிறைவு செய்ய வேண்டும். இந்த நாள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையம் செயல்பட்டு வருகிறது. யூடிஐஎஸ் என்னும் புதிய மென்பொருளில் பதிவேற்றம் செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது.
அனைத்து வரியினங்களுக்கும் குறிப்பிட்ட ஒரு எண் வழங்கப்படும் அதனை சென்னையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது.அதனால் வரி இனங்கள் செலுத்திய விவரங்கள் உடனுக்குடன் தெரிந்துவிடும். மேலும் யார் யார் வரி செலுத்தி உள்ளனர் மற்றும் வரி செலுத்தாதவர்கள் விவரங்கள் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி விவரங்களை ஒரே இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.