ஆதார் கார்டுகள்,பேன் கார்டுகளைப் போலவே ரேஷன் அட்டையும் முக்கியமான ஒன்றாகும்.இந்த அட்டையின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.தற்பொழுது நாடு முழுவதும் “ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு” என்னும் திட்டம் வர இருக்கிறது.நாட்டில் வழங்கப்படும் இலவச பொருட்கள் மற்றும் அரசு சார்ந்த உதவிக்கு ரேஷன் அட்டை முன் வகித்து வருகின்றது.
ரேஷன் கார்டுகளை புதிதாக விண்ணப்பிக்க வெப்சைட்டை (website) வெளியிட்டுள்ளது.அதன் மூலமாக நம்மால் ரேஷன் கார்டுகளை அப்லை (Apply) செய்து கொள்ளலாம்.
இதனை ஆன்லைன் மூலமாக செய்ய அந்த மாநிலத்தின் வலைத் தளங்களை பார்வையிட வேண்டும்.ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றினை வைத்திருக்க வேண்டும்.அப்படி எதுவும் இல்லை எனில் ஓட்டுனர்உரிமம், ஐ- கார்ட்டு, ஹட்க் கார்டு போன்றவற்றை வைத்து பதிவு செய்ய இயலும்.
http://www.consumer.tn.gov.in/eligibility_ration.htm
இதற்கான கட்டணமாக ரூபாய்.45 வசூலிக்கப்படும்.விண்ணப்பம் நிரப்பும் பொழுது சரியான தகவல்களை கொடுத்து விண்ணப்பம் எழுதி அனுப்ப வேண்டும்.இல்லையெனில் ரத்தாகிவிடும்.
விண்ணப்பம் செய்த பின் 30 நாட்களில் அட்டை வழங்கப்பட வேண்டும். அனைத்தும் சரிபார்ப்பும் முடிந்தவுடன் ரேஷன் கார்டு 30 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது. இது தவிர, விண்ணப்பதாரர்கள் பொது சேவை மையத்திலும் ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கலாம்.
நம் மாநில போற்டல்களில் (portal) விண்ணப்பிக்கக்கூடிய ரேஷன் கார்டுகளுக்கான அனைத்தும் மாநிலங்களின் மொழியில் உள்ளதால் எழிதில் செய்து முடிக்க இயலும். உங்கள் மொபைலில் அந்த போர்ட்டலை திறந்து, உங்களுக்கான குடும்ப அடையாள அட்டையை விண்ணப்பிக்கலாம்.