Ration Shop: ரேஷன் அட்டை தாரர்களுக்கு விநியோகம் செய்யப்படாத பொருட்களை நாளைக்கு வழங்குவதற்கு நியாய விலைக் கடைகள் செயல்பட வேண்டுமென கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். அதிலும் ஒரு கோடி பெண்மணிகள் கலைஞர் உரிமைத் தொகையையும் பெறுகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்ததிலிருந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு சரிவர பாமாயில், பருப்பு போன்றவை வழங்கப்படுவதில்லை என்ற புகார் வந்த வண்ணமாகவே இருந்தது. இதனையடுத்து தமிழக அரசு இந்த திட்டத்தை நிறுத்துவதாகவும் பல தகவல்கள் வெளியானது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசானது, கையிருப்பில் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளது என்றும் இதனை நிறுத்தும் எந்த ஒரு திட்டமும் எங்களுக்கு இல்லை என தெரிவித்தது. இருப்பினும் தற்பொழுது வரை பல இடங்களிலும் பருப்பு, பாமாயில், சர்க்கரை வழங்கப்படாமலே உள்ளது. இதனை சரி செய்யும் விதமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நியாய விலை கடை இயங்கும் என தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் கூட்டுறவு துறை நியாய விலை கடை நிர்வாகிகளுக்கு உத்தரவு ஒன்றை விடுத்துள்ளது. அதில், கட்டாயம் அனைத்து மாவட்டத்திலும் ரேஷன் கடையானது நாளை இயங்க வேண்டும். மேற்கொண்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படாத பொருட்கள் அனைத்தையும் வழங்கும் மாறும் கூறியுள்ளனர். இதனை தவிர்த்து ரேஷன் கடையை மூடும் நிர்வாகிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த கண்காணிப்பு பணியை மேல் அதிகாரிகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளனர்.