ரேஷன் அட்டை தொலைந்து விட்டதா!! இதை செய்தால் உடனே பழைய கார்டு கிடைக்கும்!!

Photo of author

By Jeevitha

ரேஷன் அட்டை தொலைந்து விட்டதா!! இதை செய்தால் உடனே பழைய கார்டு கிடைக்கும்!!

Jeevitha

Ration card is lost!! If you do this you will get old card instantly!!

Ration Card: ரேஷன் அட்டை அரசு சலுகைகளை பெற மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. இந்த அட்டை காணாமல் போய்விட்டால் அதனை ஆன்லைன் மூலம் எப்படி பெறலாம் என்பது பற்றி குறிப்பிடப்படுகிறது.

அரசின் சலுகைகளை பெற ரேஷன் அட்டை மிக முக்கியமானதாகும். அந்த அட்டை மூலம் அரசின் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 மற்றும் பண்டிகை காலங்களில் கிடைக்கும் சிறப்பு தொகுப்பு, பொங்கல் பரிசு என பல நன்மைகள் மக்களுக்கு கிடைக்கிறது. இந்த ரேஷன் அட்டை மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களான அரிசி, பருப்பு, பாமாயில் எண்ணெய் போன்றவை குறைந்த விலையில் கிடைக்கிறது.

இது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டை தொலைந்து விட்டால் கவலைப்பட வேண்டாம்.  இந்த வழிமுறைகளை செய்தால் உடனே உங்கள் அட்டையை மீண்டும் பெறலாம். https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் smart card reprint என்றும், தமிழ் மொழியில் நகல் மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்ய என்றும்  ஒரு லிங்க் இருக்கும்.

அதை கிளிக் செய்தால் ஒரு புதிய பக்கம் ஓபன் ஆகும். அதில் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட போன் நம்பரை பதிவு செய்தால் உங்களுக்கு ஒரு OTP வரும். அந்த OTP-யை உள்ளீடு செய்தால் உங்கள் அட்டை விவரம் அதில் தெரியும். அதை நீங்கள் PRINT  எடுத்துக் கொள்ளலாம். பின் அதை உணவு வழங்கள் அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பித்தால் உங்கள் புதிய ரேஷன் அட்டை விரைவில் கிடைக்கும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.