ராஜபாளையம் – குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!!

Photo of author

By Parthipan K

ராஜபாளையம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31.2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் பொருட்களில் அதிக அளவு கொண்டது அரிசி தான். அதனால் பல இடங்களில் ரேஷன் அரிசியை கடத்தி அதிக விலைக்கு விற்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. ஆனால் ரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தும் அரிசி கடத்தல் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் இன்பராஜ் என்பவர் வசித்து வகைகள். இவர் சொந்தமாக குடோன் ஒன்றை வைத்துள்ளார். இந்த குடோனில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் இன்பராஜின் குடோனுக்கு சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது குடோனில் பதுக்கி வைத்திருந்த 31.2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இன்பராஜின் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து, அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபோது, கால்நடைகளின் தீவனங்களுக்காக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.