ரேஷன் கடைகளில் இனி இதையும் செய்யலாம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

ரேஷன் கடைகளில் இனி இதையும் செய்யலாம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!
ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கியூ ஆர் கோடு ஸ்கேன் வசதி செயல்முறையில் உள்ள நிலையில் அரசு மற்றொரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் புதிய புதிய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. இதையடுத்து ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே கியூ ஆர் கோடு செயல்முறை நடைமுறையில் உள்ளது. இதை மே 31ம் தேதிக்குள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவடங்களிலும் இருக்கும் ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆன்லைன் பணபரிவர்த்தனைக்காக ஏற்கனவே 12 மத்திய கூட்டுறவு சங்கங்களில் UPI வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூட்டுறவு சங்கப் பதிவாளர் தெரிவித்தார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் Paytm, Google Pay, Phone Pay, Bharat UPI ஆகிய ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.