சூப்பர் மார்க்கெட் ஆக மாறும் ரேஷன் கடைகள்! தமிழக அரசின் அசத்தலான திட்டம்!
திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கடைகளில் பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்தது. பட்ஜெட் கூட்டு தொடரில் விவசாயிகளின் கொள்முதல் செய்யும் பயிறு போன்ற பொருட்களை ரேஷன் கடைகளில் வைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது அனைத்து ஊர்களில் இருக்கும் சில ரேஷன் கடைகள் வாடகை முறையில் இயங்கி வருகிறது. மேலும் அந்த கட்டிடங்கள் பழுதாகி சீரற்ற முறையில் உள்ளது.
அதனை சீர் செய்ய தமிழக அரசு அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் ரேஷன் கடைகள் அனைத்தும் ஒன்று போன்ற தோரணையுடன் கட்ட திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் இன்டர்நெட் வசதியும் மேம்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மக்கள் தங்களுக்கு தேவை ஏற்படும் பொழுது ரேஷன் கடைக்கு வந்து வைஃபை உபயோகம் செய்து அதற்கான பணத்தை கொடுக்கும் வசதியை செய்வதாக கூறியுள்ளனர். மேலும் மக்களுக்கு தேவையான அன்றாட பொருள்களை தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்கப்பட்டு வருகிறது.
மக்கள் இதர கடைகளில் வாங்குவதை விட குறைந்த விலையில் ரேஷன் கடையில் வழங்குவதால் அதனை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். இது எந்த அளவில் மக்களுக்கு பயன்படுகிறது என்பதை கண்காணித்துவிட்டு கூடிய விரைவில் சூப்பர் மார்க்கெட்டை போலவே ரேஷன் கடையை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மக்கள் உபயோகிக்க தேவைப்படும் அன்றாட பொருள்களை ரேஷன் கடையில் குறைந்த விலையில் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை செயலாளர் விஜய் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். அவ்வாறு சூப்பர் மார்க்கெட் போல் ரேஷன் கடை மாற்றம் செய்யப்பட்டால் மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் மலிவான விலையில் கிடைக்கும்.