#RaveenaTandon: போதை தலைக்கேறி விபத்து.. தயவு செய்து என்னை அடிக்காதீர்கள் – கெஞ்சும் KGF பட நடிகை!!
பிரபல பாலிவுட் நடிகையான ரவீனா டாண்டன் தமிழில் சாது,ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.இவர் KGF 2 படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.இந்நிலையில் ஜூன் 01 ஆம் தேதி இரவில் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு ரவீனாவும் அவரது ட்ரைவரும் மும்பை கார்ட்டர் சாலை பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டி சாலையில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதில் அப்பெண்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.ரவீனாவின் கார் ட்ரைவர் காரில் இருந்து இறங்கி அப்பெண்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது.காரில் இருந்து போதையில் தள்ளாடியபடி இறங்கிய ரவீனாவும் அவரது கார் ட்ரைவருடன் சேர்ந்து அப்பெண்களை தாத்தியதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ரவீனாவை சூழ்ந்து கொண்டு அச்சம்பவத்தை வீடியோ பதிவு செய்தனர்.
கூட்டத்தில் இருந்த சிலர் ரவீனாவை தாக்கிய நிலையில் “தயவு செய்து என்னை அடிக்காதீர்கள்.என்னை தள்ளாதீர்கள்” என்று ரவீனா கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்கில் வேகமாக பரவி வருகிறது.
ககர் போலீஸார் விளக்கம்:
இந்நிலையில் அப்பகுதியில் பதிவாகி இருந்த CCTV கேமராவில் ரவீனாவின் கார் அந்த பெண்களின் மீது மோதாமல் விலகி சென்றிருக்கிறது.சம்பவத்தன்று ரவீனா மது போதையில் இல்லை.அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று தற்பொழுது ககர் போலீஸார் விளக்கமளித்திருக்கின்றனர்.