ரவி மோகன் கெணிஷா திருமணம்.. அடுத்தடுத்து வந்த அறிவிப்பு!! ஷாக்கில் உறைந்த ஆர்த்தி!!

Photo of author

By Rupa

ரவி மோகன் கெணிஷா திருமணம்.. அடுத்தடுத்து வந்த அறிவிப்பு!! ஷாக்கில் உறைந்த ஆர்த்தி!!

Rupa

CINEMA: திரை பிரபலங்களின் விவாகரத்தானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதில் பெரும் பரபரப்பாக பேசப்படும் ஜோடி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தான். ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினாலும் ஆர்த்தி நான் விவாகரத்து அளிக்க மாட்டேன் என பிடிவாதமாக உள்ளார். ஆரம்ப கட்டத்தில் இதற்கு முக்கிய காரணம் பாடகியான கெனிஷா தான் என பல விமர்சனங்கள் வைக்கப்பட்ட போது ஜெயம் ரவி அதனை முழுமையாக மறுத்து வந்தார். அவர் எனது தோழிதான் மேலும் எனது ஹீலிங் பிரச்சினைகளுக்கு உதவிகரமாக இருந்தார் என தெரிவித்தார்.

ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் இல்லத் திருமண விழாவில் ஜெயம் ரவி கெனிஷா உடன் தான் கலந்து கொண்டார். இவர்களுடைய புகைப்படங்கள் சோசியல் மீடியா எங்கும் தீயாக பரவியது. இதனையடுத்து ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி உருக்கமான பதிவையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதனால் ஒட்டுமொத்த கவனமும் அவர் மீது திரும்பியது. தற்போது அதனை எதிர்த்து ஜெயம் ரவி பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், நான் மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் உள்ளேன், அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு.

என் மகன்களை பார்க்க அனுமதிப்பதில்லை. என் மீது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுக்கிறேன். அதேபோல நான் பிரிவது மனைவியை தான் தவிர குழந்தைகளை கிடையாது. பொருளாதார ரீதியாக அவர்களை தொல்லை செய்வதாக கூறுவது மிகவும் நகைச்சுவையாக உள்ளது. எனது இன்னல்களில் கூட இருந்தவர் கெனிஷா தான். தோழியாக இருந்தவர் தற்போது துணையாக மாறி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் விவாகரத்து கிடைத்ததும் கட்டாயம் ஜெயம் ரவி கெனிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவது உறுதியாகியுள்ளது.