3 பார்மட் ப்ளேயர்… இந்திய வீரருக்கு டெஸ்ட் வாய்ப்பு கொடுக்க சொன்ன ரவி சாஸ்திரி
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட்-சூர்யா கூட்டணி மீண்டும் ஒருமுறை அருமையான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இந்த போட்டியில் 25 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ்.
நெதர்லாந்து போட்டிக்கு பிறகு சூர்யகுமார் யாதவ்வைப் பற்றி பேசியுள்ள ரவி சாஸ்திரி “சூர்யகுமார் மூன்று பார்மட்களுக்குமான ப்ளேயர். அவரை டெஸ்ட் போட்டியிலும் விளையாட வைக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரியும் அவர் பெயர் டெஸ்ட் போட்டிகளுக்காக தேர்வு செய்யப்படாது என்று. ஆனால் அவரை ஐந்தாவது இடத்தில் இறக்கிப் பாருங்கள். கலக்குவார். சில மிடில் ஆர்டர் மாயாஜாலங்களையும் செய்வார்” எனக் கூறியுள்ளார்.
தற்போது ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ். டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே மிடில் ஆர்டருக்கான பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருக்கின்றனர். இதனால் ரவி சாஸ்திரி சொல்வது போல சூர்யகுமார் யாதவுக்கு டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவரின் அதிகபட்ச தரவரிசையாக முதல் இடத்தில் சில நாட்கள் இருந்தார்.