மீண்டும் இந்தியன் 2 படத்தில் இணைந்த விலகிய கலைஞர்… அடுத்தடுத்து நடக்கும் மாற்றம்!

0
177

மீண்டும் இந்தியன் 2 படத்தில் இணைந்த விலகிய கலைஞர்… அடுத்தடுத்து நடக்கும் மாற்றம்!

கமல்ஹாசனின் மெஹா ஹிட் திரைப்படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து மற்றும் தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இருந்து பல கலைஞர்கள் தங்களின் வேறு பணிகளுக்காக வெளியேறினர். அதில் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி வர்மனும் ஒருவர். அவருக்கு பதிலாக ரத்தினவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்து அந்த படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.இந்நிலையில் இப்போது  இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. படத்தைத் தொடங்குவதில் உதயநிதி ஸ்டாலின் ஆர்வம் காட்டிவரும் நிலையில் படத்தை லைகாவிடம் இருந்து கைப்பற்றி மீதிப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இநிலையில் இப்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட உள்ள நிலையில் ரவி வர்மன் மீண்டும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது ரத்தினவேல் மற்ற படங்களில் பிஸியாக உள்ளதால் அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleஊர்  சுற்றலாம் வாங்க! மாணவர்களை அழைத்த ஊராட்சி மன்ற தலைவர்!
Next articleஆசைக்கு அழைத்த கணவனை ஆசிட்டில் மிளகாய் பொடியை கலந்து  ஊற்றி ஓட்டம் பிடித்த குடும்ப பெண்!..