Reserve Bank: செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை ரீ ஆக்டிவேட் செய்ய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி வங்கி முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமீப காலமாக தொலைபேசி அழைப்புகள் மூலம் சைபர் கிரைம் மோசடி குறித்து எச்சரிக்கை மத்திய தொலை தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு பத்தாண்டு வருகையை முன்னிட்டு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது மூன்று விதமான வங்கி கணக்குகளை முடக்க முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2 வருடங்களாக எந்த வித பரிவர்த்தனைகளை செய்யாத வங்கி கணக்குகள், 12 மாதங்களாக எந்த வித பணப் பரிமாற்றம் செய்யாத வங்கி கணக்குகள். நீண்ட காலமாக ஜோரோ வைப்பு நிதியை வைத்து இருக்கும். வங்கி கணக்குகளை முடக்குவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
எனவே, இரண்டு வருடங்களாக எந்த வித பரிவர்த்தனைகளையும் செய்யாத வங்கி கணக்குகளை ரீ ஆக்டிவேட் செய்ய இணையம் அல்லது நேரடியாக வங்கி கிளைகளுக்கு சென்று வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்குகள் முடங்கியதில் இருந்து மீட்டுக் கொள்ளலாம். அந்த வகையில் ரீ ஆக்டிவேட் செய்யப்படாத வங்கி கணக்குகள் முடங்கும் அபாயம் ஏற்படுள்ளது.