சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி,ஆர்பிஐ அறிவித்திருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
அதாவது, 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் NEFT மூலம் கட்டணமின்றி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆர்பிஐ வழிவகை செய்துள்ளது.இதற்கு முன்பு பரிவர்த்தனைக்கு ஏற்றார் போல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. இப்போது அதை மாற்றி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல்
சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு NEFT மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் போது பிடித்தம் செய்யப்படும் அனைத்து கட்டணமும் ரத்து செய்யுமாறு ஆர்பிஐ, அனைத்து வங்கிகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளது.
அதே சமயம்,NEFT மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய இதுவரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயலும் வகையில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 16ம் தேதி முதல் என்இஎஃப்டி மூலம் 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.